வயிற்றுக்கு மட்டும் உணவல்ல, மனதுக்கும் ஆனந்தம்!!!
ஓரிடத்திலேயே சுவை, தூய்மை, அன்பு, மனநிறைவு!!!
வாழை இலை போட்டு, காய்கறிகள் நிரப்பி சாப்பாடு, நேசத்தோடு பரிமாறி, அம்மா கையில் சாப்பிட்டதுபோல் திருப்தி… இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சாப்பாடு மட்டுமா…இல்லை எண்ணற்ற டிபன் வகை… சிறுவர் முதல் முதியோர் வரை அவர்களுக்கு ஏற்றாற்போல் உணவு… வெஜிடேரியன் வகையில் இவ்வளவு இருக்கிறதா என வியக்க வைக்கும் புதுப்புது உணவு வகை.
அனைத்தையும் காலை, மாலை என குடும்பத்தோடு வந்து உணவருந்தி மனநிறைவோடு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது.
விஸ்தரிப்பு… நவீனம்
வாடிக்கையாளர்களின் வசதிக்காகவே ஸ்ரீஆனந்தாஸ் லட்சுமி மில் ஜங்ஷன் பகுதியில் தொடங்கப்பட்ட கிளை இப்போது விஸ்தரிக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஆனந்தாஸ் உருவான கதை சற்றே சுவாரசியமானது…ஆச்சரியப்படுத்தியது.
தலைமுறைகள் தாண்டி உழைப்பை அடித்தளமாகவும், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மூலதனமாகவும் கொண்டு உருவான பிராண்ட் ‘ஸ்ரீ ஆனந்தாஸ்.
உணவின் தரம், சுவை, தூய்மை, வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, வாடிக்கையாளர்களின் மாறிவரும் உணவு விருப்பங்களுக்கும் ஏற்ப தொடர்ந்து புதுமைகளை அறிமுகப்படுத்தி வரும் நிறுவனம், இன்று பல்வேறு கிளைகளுடன் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறது.
ஆனந்தாஸுக்கு அடித்தளமிட்டவர் புருஷோத்தமன் அய்யா.
திருநெல்வேலியில் ஹோட்டல் தொழிலைத் தொடங்கி, தனது உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் படிப்படியாக வளர்ந்த அவர், உணவின் தரம், விருந்தோம்பல், வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றுக்கு எப்போதும் முக்கியத்துவம் அளித்து வந்தார்.
கோவையில் 1998-ம் ஆண்டு காந்திபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலை ஏற்று நடத்தத் தொடங்கியதன் மூலம், ஆனந்தாஸின் கோவைப் பயணம் தொடங்கியது.
2000-ம் ஆண்டில் ‘ஆனந்தாஸ்’ என்ற பெயர் அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தத் தொடங்கப்பட்டது. தொடர்ந்து சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிளைகள் உருவாக்கப்பட்டு, கோவை மக்களிடையே ஆனந்தாஸ் என்ற பெயர் பரவத் தொடங்கியது.
‘அதே இட்லி, தோசைதானா? வித்தியாசமாக எதுவும் இல்லையா?’ என்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு, உணவு வகைகளில் சுமார் 250 வகையான உணவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், வாரந்தோறும் உணவுப் பட்டியலிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
லட்சுமி மில் ஜங்ஷன் கிளை
2010-ம் ஆண்டு கோவை லட்சுமி மில் ஜங்ஷன் பகுதியில் தொடங்கப்பட்ட கிளை, ஆனந்தாஸின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய அடையாளமாக அமைந்தது.
கோவையில் சிறந்த வசதிகளைக் கொண்ட உணவகங்களில் ஒரு முன்மாதிரி உணவகமாக இந்தக் கிளை உருவாக்கப்பட்டது.
குளிர்சாதன வசதியுடன் கூடிய சைவ உணவகமாக அமைக்கப்பட்டதுடன், அக்காலகட்டத்தில் சைவ உணவகங்களில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
நட்சத்திர ஹோட்டல்களுக்கு இணையான கழிப்பறை வசதிகள் ஒரு சைவ உணவகத்தில் முதன்முறையாக, வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டன.
2010-ம் ஆண்டில் இந்தக் கிளையில் ‘டயட் டிபன்’ அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்குக் கிடைத்த வரவேற்பு, வாடிக்கையாளர்களின் மாறிவரும் உணவுப் பழக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்டு புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஆனந்தாஸின் அணுகுமுறைக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்தது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு …
லட்சுமி மில் ஜங்ஷன் கிளை தற்போது 16 ஆண்டுகளைக் கடந்துள்ளது. காலத்திற்கேற்ப வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய பொலிவும், கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சமையலறையிலும், உணவகத்தின் பிற பகுதிகளிலும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து வசதியாக உணவருந்தும் வகையில், உணவருந்தும் பகுதி விசாலமாகவும், மேசைகளுக்கு இடையே போதுமான இடைவெளியுடனும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
பார்சல் பெற வருபவர்கள் மற்றும் உணவுக்காகக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக தனித்துவமான குளிர்ச்சியான காத்திருப்புப் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.
சேவை நேரம் நீடிப்பு
உணவருந்தும் பகுதிகளில் சீரான காற்றோட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நவீன சமையலறை உபகரணங்களுடன் கூடிய சுகாதாரமான சமையலறையும் அமைக்கப்பட்டுள்ளது.
லட்சுமி மில் ஜங்ஷன் கிளையில் தினமும் மாறுபட்ட சிறப்பு உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுப் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இப்போது லட்சுமி மில் ஜங்ஷன் கிளையில் இரவு 11 மணி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையோடு வருபவர்களுக்கு ஏமாற்றாமல் உணவு வழங்குவதற்காகவே சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனந்தாஸின் வளர்ச்சியில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு முக்கிய இடம் உள்ளது. உணவின் தரம் மற்றும் சுவையுடன், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பும் சேவையும் நிறுவனத்தின் முக்கிய பலமாக இருந்து வருகிறது.
உணவகத்தின் பெயரையும் நற்பெயரையும் உருவாக்குவதில் பணியாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பணியாளர்களை குடும்பத்தின் ஒரு பகுதியாகக் கருதி, அவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளித்து வருவது நிறுவனத்தின் பண்பாட்டில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
தலைமுறைகள் …
புருஷோத்தமன் அய்யா அவர்கள் தொடங்கிய பயணம் அடுத்தடுத்த தலைமுறைகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மூன்றாம் தலைமுறையினரும் தொழிலில் இணைந்து வருகின்றனர்.
இயக்குநர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, நீண்டகாலமாக இணைந்து பயணிக்கும் நண்பர்கள் மற்றும் திறமையான நிர்வாகக் குழுவினரும் தங்களுக்கான பொறுப்புகளை ஏற்று நிறுவனத்தின் வளர்ச்சியில் பங்களித்து வருகின்றனர்.
பாரம்பரிய சுவையையும் தரத்தையும் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டு, வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருவது ஆனந்தாஸின் பயணமாக உள்ளது.
இன்று தினமும் பல ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு உணவு மற்றும் சேவையை வழங்கி வரும் ஆனந்தாஸ், ஒரு உணவக நிறுவனம் என்ற வரம்பைத் தாண்டி, பல தலைமுறைகளின் உழைப்பு, ஒற்றுமை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் அடையாளமாகத் தொடர்ந்து வருகிறது.
புருஷோத்தமன் அய்யா அவர்கள் அமைத்த அடித்தளத்தைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையின் புதிய சிந்தனைகளையும் முயற்சிகளையும் இணைத்துக்கொண்டு, பாரம்பரிய சுவையையும் சிறந்த சேவையையும் வழங்கியபடி எதிர்காலத்தை நோக்கி ஆனந்தாஸின் பயணம் தொடர்கிறது.
சிறப்பு உணவு வகைகள்

‘கேசரிகளில் பல சுவை’
முன்னதாக ‘பைனாப்பிள் கேசரி’, ‘மிக்ஸ்டு ஃப்ரூட் கேசரி’, ‘கொய்யா கேசரி’ உள்ளிட்ட கேசரி வகைகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது, ‘ஆரஞ்சு கேசரி’, ‘கிரான்பெர்ரி கேசரி’, ‘கிவி கேசரி’, ‘ப்ளூபெர்ரி கேசரி’, ‘ரோஸ் பெடல் கேசரி’ உள்ளிட்ட பல்வேறு வகையான கேசரிகளும் இடம்பெறுகின்றன.
இட்லி மற்றும் தோசை வகைகள்
இட்லி மற்றும் குழம்பு வகைகளிலும் பல்வேறு தேர்வுகள் உள்ளன. ‘தட்டு இட்லி’, ‘கறிவேப்பிலை குழம்பு’, ‘வாழைப்பூ குழம்பு’, ‘நெல்லிக்காய் குழம்பு’, ‘தக்காளி குழம்பு’, ‘சைவ மட்டன் குழம்பு’ உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
தோசை வகைகளிலும் தினமும் மாறுபட்ட தேர்வுகள் இடம்பெறுகின்றன. ‘மஷ்ரூம் மசாலா தோசை’, ‘பன்னீர் மசாலா தோசை’, ‘ரெகுலர் மசாலா தோசை’, ‘காலிஃப்ளவர் மசாலா தோசை’ உள்ளிட்ட வழக்கமான தேர்வுகளுடன், ‘ஸ்வீட் பொட்டேட்டோ மசாலா தோசை’, ‘மைசூர் மசாலா தோசை’, ‘பேபி கார்ன் செட்டிநாடு மசாலா தோசை’ உள்ளிட்ட சிறப்பு வகைகளும் வழங்கப்படுகின்றன.
‘இளந்தோசை – பூண்டு குழம்பு’ ஆனந்தாஸின் சிக்னேச்சர் டிஷ்ஷாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டு வருகிறது.
சிறுதானிய தோசை வகைகளில் தினமும் ஒரு வகை என்ற முறையில் ‘ராகி தோசை’, ‘சோளம் தோசை’, ‘கம்பு தோசை’ உள்ளிட்டவை மாறி மாறி வழங்கப்படுகின்றன.
விதவிதமான பொங்கல்
பொங்கல் வகைகளிலும் தினசரி ‘மாப்பிள்ளை சம்பா பொங்கல்’, ‘சின்ன வெங்காய பொங்கல்’, ‘மல்லி பொங்கல்’, ‘வாழைப்பூ பொங்கல்’, ‘பச்சைப் பயறு பொங்கல்’, ‘மிளகு பொங்கல்’ உள்ளிட்டவை மாறி மாறி வழங்கப்படுகின்றன.
தினமும் வழங்கப்படும் கிச்சடியிலும் ‘ரவா கிச்சடி’, ‘வெஜிடபிள் கிச்சடி’, ‘கார்ன் கிச்சடி’ போன்ற பல்வேறு வெரைட்டிகள் இடம்பெறுகின்றன.
பரோட்டாவில் …
பரோட்டா பிரியர்களுக்காக ‘விருதுநகர் பரோட்டா’, ‘பிச்சு போட்ட விருதுநகர் பரோட்டா’, ‘செட்டிநாடு மசாலா பரோட்டா’ உள்ளிட்ட பரோட்டா மற்றும் ஸ்டஃப்டு பரோட்டா வெரைட்டிகளும் வழங்கப்படுகின்றன.
இதனுடன் ‘பட்டாணி சால்னா’, ‘மெரினா பட்டாணி சால்னா’, ‘விருதுநகர் சால்னா’ போன்ற சால்னா வகைகளும் வழங்கப்படுகின்றன.
மதிய உணவு நேரத்தில் சவுத் இந்தியன், நார்த் இந்தியன், சைனீஸ், தந்தூரி மற்றும் பல்வேறு மீல்ஸ் வகைகளும் வழங்கப்படுகின்றன.



Leave a Reply