தங்க நகைப் பிரியர்களுக்கு மீண்டும் ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஒட்டுமொத்தமாக ரூ.1,360 வரை அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகளும் சாமானிய மக்களும் நகை வாங்குவதைக் குறித்துக் கவலை அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.65 அதிகரித்து ரூ.13,880-க்கும், ஒரு சவரன் ரூ.520 உயர்ந்து ரூ.1,11,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இருந்த ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, தங்கம் மீண்டும் தனது விலையை உச்சம் நோக்கி நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கும் வேளையிலும், வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நிலைத்து நிற்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகி வருகிறது.
பொருளாதார வல்லுநர்களின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் தங்கம் ஒரு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக விளங்கும் என்பதால், இதன் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது. எனவே, தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்கள் தாமதிக்காமல் இப்போதே வாங்குவது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.



Leave a Reply