பிரச்சாரக் களத்தில் எழுந்த சர்ச்சை: மு.க.ஸ்டாலின் மீது புகார்!

Spread the love

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக பெண் வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதாகக் கூறி, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக சட்டப் பிரிவு சார்பில் புகார் அளிக்கடைந்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்த தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகார் மனுவை அளித்தார். அதில், தவெக வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்யும் வகையில் கொச்சை வார்த்தைகளை பயன்படுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “அந்த உடலை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடித்தாரோ தெரியவில்லை” என்று தனிப்பட்ட முறையில் விமர்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தித் தவெக புகார் அளித்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்குக் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *