இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Spread the love

தங்கத்தின் விலை உயர்வால் கவலையில் இருந்த பொதுமக்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் நிம்மதியளிக்கும் வகையில், இன்று (அக்டோபர் 3) ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

சர்வதேசச் சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் நிலவி வரும் சூழலில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,675-க்கும், சவரனுக்கு ரூ.800 வரை சரிந்து ரூ.1,09,400-க்கும் விற்பனையாகிறது.

அதேவேளையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245 என்ற நேற்றைய விலையிலேயே தொடர்கிறது. பண்டிகைக் காலம் நெருங்கி வரும் இந்த வேளையில் தங்கத்தின் விலை குறைந்திருப்பது நகைப் பிரியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.