கோவையில் மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக, வன்னியரசு, சமூக விரோத கருத்தை வாபஸ் பெற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கோவை பந்தயசாலையில் உள்ள, தெற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் ஸ்ரீல ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தலைமை வகித்தனர். மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது தொடர்பாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கருத்தை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் விஸ்வகர்மா சமுதாய மக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து விழா மேடையில் பேசிய பாபு ஜி சுவாமிகள் கூறியதாவது;
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. ஆனால் மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று பேசியிருப்பது கடும் கன்டனத்திற்கு உரியது. இதனை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கண்டிக்க வேண்டும். தமிழக முதல்வர் விஜய் அனைத்து மக்களின் தேவைகளும் நமக்கு தேவை என்று, மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கின்றார், திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்கின்றார். நெற்றியில் திருநீறு பூசி கொள்கிறார், சந்தனம் பூசி கொள்கிறார் ஆனால் மதவாதம் குறித்து பேசுவதில்லை ஆனால் வன்னியரசு பேசியுள்ளது அவரது மன அழுக்கை காட்டுகின்றது எனவே வன்னியரசு இந்த வாக்கை திரும்ப பெற வேண்டும்.
பசுக்கள் இந்துக்கள் வழிபடும் ஒரு கடவுள், அந்த கடவுளை இழிவு படுத்தி வன்னியரசு பேசியுள்ளார், மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்க படும் என்று கூறியதற்கு பதில் பன்றி இறைச்சி வழங்க படும் என்று கூற முடியுமா? அப்படி கூறினால் இஸ்லாமியர்கள் அவரை சும்மா விடுவார்களா என்று கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply