கே.பி.ஆர். கல்லூரியில் ‘மிலன் ’26’ கலந்துரையாடல் நிகழ்ச்சி!

Spread the love

கோவை கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், ‘மிலன் ’26’
தொழில்–கல்வித்துறை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

‘கூட்டு புதுமைகளின் மூலம் திறன் மேம்பாடு’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
தொழில்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், வேலைவாய்ப்புத் திறன்கள், தொழில்துறையின் எதிர்பார்ப்புகள்
மற்றும் தொழில்–கல்வித்துறை ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

பெங்களூரு காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் எஸ். விஜயபாஸ்கரன் சிறப்பு
விருந்தினராகவும், ஹனிவெல் ஏரோஸ்பேஸ் மூத்த தலைமை பொறியாளர் ஜார்ஜ் கொயில்பிள்ளை
கவுரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

மேலும், ஏபிபி இந்தியா ஆபரேஷன்ஸ் சென்டர் மனிதவளத் தலைவர் கமலப்ரியா மோகனரங்கன்,
டிவிஎஸ் டிஜிட்டல் டிஜிட்டல் இன்ஜினியரிங் தலைவர் தில்லை ராஜன், டிரைடென்ட் நியூமேட்டிக்ஸ்
பொது மேலாளர் அனில் டேவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டாக்டர் விஜயபாஸ்கரன் பேசுகையில், மாணவர்கள் விடாமுயற்சி, புதுமை சிந்தனை மற்றும்
தொடர்ச்சியான கற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். ஜார்ஜ் கொயில்பிள்ளை, செயற்கை
நுண்ணறிவு மற்றும் விமானவியல் துறையில் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், தொழில்துறை தேவைகளுக்கேற்ப மாணவர்களின்
திறன்களை மேம்படுத்துதல், கூட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், ஆலோசனை மற்றும் திறன்
மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாணவர்கள் தொழில்துறை வல்லுநர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, நவீன தொழில்நுட்பங்கள்,
தொழில்துறையின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும்
வாய்ப்பாக நிகழ்ச்சி அமைந்தது.