தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) இன்று சிறப்பு eKYC (இ-கே.ஒய்.சி – விரல்ரேகை சரிபார்ப்பு) முகாம் நடைபெறுகிறது. பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைச் சரிபார்க்கும் நோக்கில் இச்சிறப்பு முகாமிற்குத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த முகாம் செயல்படும். இதில் குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் நேரடியாகச் சென்று தங்களது கைவிரல் ரேகையைப் பதிவு செய்து eKYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.
இருப்பினும், இடைத்தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட ரேஷன் கடைகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளைத் தவிர்த்து, தமிழகத்தின் பிற அனைத்துப் பகுதிகளிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் இச்சிறப்பு முகாம் தடையின்றி நடைபெறும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது.



Leave a Reply