வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களுக்குக் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை நிலவரத்தின் முக்கிய அம்சங்கள்:
- இன்று (செப். 19): நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
நாளை (செப். 20): நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
செப்டம்பர் 21 & 22: நீலகிரி, கோவை, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும்.
-
செப்டம்பர் 23: நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.



Leave a Reply