திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறவிருந்த இந்த விழா, தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாட்கள், மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து இந்த முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் திராவிட இயக்க வளர்ச்சிக்குப் பங்காற்றிய மூத்த நிர்வாகிகளுக்கு வழக்கம்போல கழக விருதுகள் வழங்கப்பட உள்ளன.



Leave a Reply