பேரூர், தீத்திபாளையம் அருகே வெங்கடேஸ்வரா நகரில் ஸ்ரீ ராஜகணபதி பிரதிஷ்டை விழா நடந்தது.
விழாவானது கடந்த 6-ந்தேதி காலை 6 மணிக்கு முகூர்த்த கால் இடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு விநாயகர் சிலை, முளைப்பாரிகை, தீர்த்த கலசம் ஆகியன மேளதாள வாத்தியங்களுடன்
தண்டக்காரன்புதூர் விநாயகர் கோவிலில் இருந்து அழைத்து வரப்படும் நிகழ்ச்சி நடந்தது.
பின்னர் கடந்த 13-ந்தேதி மாலை மங்கள இசை, வாஸ்து சாந்தி நடத்தப்பட்டு, முதல் கால யாக பூஜையும், 108 திரவியாக ஹோமங்களும், பின்னர் இரவு அஷ்டபந்தனை மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதையடுத்து நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், தீபாராதனையும் 16 வகை அபிஷேகங்களும், நடத்தப்பட்டுத்த ங்கக்கு, கலச அபிஷேகமும் நடத்தப்பட்டு, அலங்கார பூஜைகளும் நடந்தது. இதையடுத்து அமுதபூஜை, மகா தீபாராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் 10.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீவெங்கடேஸ்வரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் செய்திருந்தது.
தீத்திபாளையம் அருகே ஸ்ரீராஜகணபதி பிரதிஷ்டை விழா



Leave a Reply