18-வது பிரிக்ஸ் மாநாடு: தாமரைச் சின்னத்தில் மிளிரும் ‘நமஸ்தே’!

Spread the love

இந்தியாவின் தேசிய மலரான தாமரையை முதன்மைப்படுத்தி, 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கான புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சின்னத்தின் நடுவில் பொறிக்கப்பட்டுள்ள ‘நமஸ்தே’ முத்திரை இந்தியப் பண்பாட்டின் விருந்தோம்பல், வரவேற்பு மற்றும் கூட்டுறவு மனப்பான்மையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

மேலும், தாமரையின் ஒவ்வொரு இதழிலும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய தொடக்க உறுப்பு நாடுகளின் தேசியக் கொடி நிறங்கள் மிளிர்ந்து, உலகளாவிய ஒற்றுமையையும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பையும் அழகாகப் பிரதிபலிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *