,

ஓட்டுநர் உரிமம் இனி ஒரே நாளில்! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

Spread the love

சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை விவாதங்களின் போது, 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய் இன்று வெளியிட்டார். அதன்படி, ஓட்டுநர் உரிமம் (DL) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) இனி டிஜிட்டல் முறையிலேயே வழங்கப்படும் என்றும், ஓட்டுநர் உரிமத்தை ஒரே நாளில் பொதுமக்கள் தாங்களாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2021 முதல் 2026 வரையிலான ஆட்சிக் காலத்தில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தி, கைது நடவடிக்கைக்கும் வழக்குகளுக்கும் ஆளான ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளும் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ஆண்டுக் கோரிக்கைக்குத் தீர்வாக அமைந்திருப்பதோடு, சம்பந்தப்பட்ட துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *