அம்பாசமுத்திரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது ராஜினாமாவை திரும்பப்பெற அனுமதிக்கக் கோரி சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் அளித்துள்ளார். ஆனால், ராஜினாமாவை திரும்பப்பெறுவதற்கு விதிகளில் இடமில்லை என பேரவை செயலர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கெனவே காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதே ஒரே தீர்வு என்றும் பேரவை செயலர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சபாநாயகர் தரப்பில் இருந்து இசக்கி சுப்பையாவுக்கு நாளை பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



Leave a Reply