நபி திருநாளை முன்னிட்டு, கோவை மைல்கல்–சுகுணாபுரம் பகுதியில் அரபிக் பாடசாலை குழந்தைகள் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இனிப்புகள், பழரசங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாளைக் குறிக்கும் மிலாது விழாவை முன்னிட்டு, சுகுணாபுரம் பகுதியில் உள்ள அரபிக் பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மைல்கல் சுகுணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே எஸ்.பி.வேலுமணி நேரில் பங்கேற்று குழந்தைகளுக்கு குளிர்பானங்கள், பழரசங்கள், பிஸ்கட் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
அரபிக் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கிய எஸ்.பி.வேலுமணி



Leave a Reply