புதிய BMW X1 லாங் வீல்பேஸ் கார் இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டின் மிகவும் வெற்றிகரமான லக்ஸரி ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெஹிக்கிளாக BMW X1 புகழ்பெற்றிருக்கிறது. இப்போது லாங் வீல்பேஸ் என்ற புதிய அவதாரம் எடுத்திருக்கும் இந்த வெஹிக்கிள், அதிகரிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் பல டிஜிட்டல் மேம்பாடு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
இந்தப் புதிய BMW X1 லாங் வீல்பேஸின் பெட்ரோல் வேரியண்ட், உள்நாட்டிலேயே சென்னையில் உள்ள BMW குரூப் பிளாண்ட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவுகளை இன்று முதல் BMW டீலர்ஷிப்களில் செய்யலாம்.
ஹர்தீப் சிங் பிரார், பிரசிடென்ட் மற்றும் CEO, BMW குரூப் இந்தியா கூறியதாவது: “BMW X1 இந்தியாவில் மிகச்சிறப்பான வெற்றி வரலாறைப் படைத்திருக்கிறது; மேலும் லக்ஸரி SUV செக்மென்ட்டில் இதன் தனிச்சிறப்பான ஆதிக்கம் தொடர்கிறது. புதிய BMW X1 லாங் வீல்பேஸ், அதிக இடவசதி, கூடுதல் சௌகரியம், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் கம்பீரமான தோற்றம் என சக்திவாய்ந்த புதிய அம்சங்களுடன் இந்த தலைமைத்துவ நிலையை மேலும் வலுவாக்குகிறது. இந்த பிரிவில் மிக நீளமான, மிக உயரமான மற்றும் அகலமான கார் என்ற வகையில், இது உண்மையிலேயே விசாலமான இடம் மற்றும் சௌகரியமான பின்பக்க இருக்கை வசதிகளையும் வழங்குகிறது. அதே நேரத்தில் BMW கார்களுக்கே உரிய கம்பீரம், செயல்திறன் மற்றும் டிரைவிங் செய்வதில் மகிழ்ச்சி ஆகிய தனித்துவ அம்சங்களை தொடர்ந்து இது தக்கவைத்துள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம், இந்த மாடலின் கவர்ச்சிகரமான தோற்றத்தை நாங்கள் மேம்படுத்தியிருப்பதற்கும் கூடுதலாக, இந்த வகையினத்தில் லக்ஸரி SUV பிரிவில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தரத்தையும், சொகுசு வசதிகளையும் உயர்த்தியிருக்கிறோம்,” என்றார்.
புதிய BMW X1 LWB-யின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 49,90,000 ஆகும்.
இன்வாய்ஸ் செய்யும்போது நடைமுறையில் உள்ள விலையே பொருந்தும். எக்ஸ்-ஷோரூம் விலை, பொருந்தக்கூடிய GST – ஐ உள்ளடக்கியது. ஆனால், ரோடு டேக்ஸ், டேக்ஸ் கலெக்டட் அட் சோர்ஸ் (TCS), RTO ஸ்டேச்சுடரி டேக்சஸ்/ஃபீஸ், பிற லோக்கல் டேக்ஸ் செஸ் லெவிஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவை இதில் அடங்காது. விலை / விருப்பத்தேர்வுகள் முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்படுவதற்கு உட்பட்டவை. மேலும் தகவலுக்கு, ஆத்தரைஸ்டு BMW டீலரைத் தொடர்பு கொள்ளவும்.



Leave a Reply