தமிழ்நாட்டில் நகர் புற வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், தொழில்மயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குப்பைக்கழிவுகள் அதிகரித்து , சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடாக மாறியுள்ளது. தமிழகத்தில் தினசரி சுமார் 16,500 டன் திடக்கழிவு உருவாகிறது. சென்னையில் மட்டுமே தினசரி சுமார் 6,150 டன் குப்பை உற்பத்தியாகி பெரும் சவாலாகவே மாறியுள்ளது. சேகரமாகும் குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படுவதால் நீர், மண், காற்று மாசை உருவாக்குவதோடு பல தொற்றுநோய்களுக்கும் காரணமாகிறது.
தற்போது, குப்பை ஒரு பிரச்னை அல்ல அது வருமானம் தரும் வளம் என்னும் வகையில் உயிரி எரிவாயு ஆலை (Bio-CNG) மூலம் பயன்படத்தக்க வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாய, உணவு, தாவர உள்ளிட்ட கழிவுகளின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயோகேஸை சுத்திகரித்து உயர் மீத்தேன் அடங்கிய எரிபொருள் உருவாகிறது. இதனை எரிபொருளாக பயன்படுத்த முடியும். அதோடு, உயர்தர இயற்கை உரமாக உள்ளது. இதன்மூலம் மாநிலத்தின் எரிசக்தி தேவையினை பூர்த்தி செய்ய முடியும். ரசாயன உரங்களின் பயன்பாட்டையும் குறைக்க இயலும்.
குப்பைகள் பயன்பாடில்லா மல் தீங்கு விளைவிப்பது இதன்மூலம் தடுக்கப்படுகிறத. மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும், புதிய தொழில் வாய்ப்புகளும் உருவா
கும். பசுமை எரிசக்தி துறையில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழும் நிலையில் தமிழ்நாடு இதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அரசு பல கோடி ரூபாய் செலவு செய்து வந்த போதிலும் தொடரும் குப்பைகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்விகளையே தழுவுகின்றன. அதிலும் நீர்நிலை
களில் சேகரமாகும் கழிவுகள் பல்வேறு வகையில் பாதிப்பு
களை ஏற்படுத்துவதோடு மண்ணின் தன்மையினையும் மாற்றி நிலத்தடி நீர் ஆதாரத்தையும் பாழ்படுத்தி விடுகின்றன. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக உயிரி எரிவாயு ஆலை அமைப்பதேன விமோசனமாக அமையும். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளையும் உருவாக்காமல் குப்பையினையும் வருவாய் ஆதாரமாக மாற்றலாம்.
சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு ஆலையினை சமீபத்தில் தமிழக முதல்வர் பார்வையிட்டார். மக்கும் கழிவுகளை இயற்கை உரமாகவும், மக்காத கழிவுகளை சாலை அமைக்க மற்றும் சிமெண்ட் ஆலைகளில் மாற்று எரிபொருளாக பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்தார். சென்னையில் மட்டுமே இயங்கி வரும் இத்தகைய Bio-CNG ஆலை தமிழகம் முழுவதும் சேகரமாகும் குப்பை பிரச்னையினை தீர்த்து வைக்க இயலாது. இதுபோல் தமிழ்நாட்டில் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் Bio-CNG அமைக்கப்பட வேண்டும். இதனால், குப்பையை கொண்டு வருவாய் ஈட்ட முடியும்.
குப்பை அல்ல பணம்… தமிழகம் முழுவதும் உயிரி எரிவாயு ஆலை அமைக்கப்படுமா?



Leave a Reply