தகவலின்படி, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், தனது வாகனத்தை மேம்பாலத்தின் ஓரமாக நிறுத்திவிட்டு, எதிர்பாராத விதமாக பாலத்தின் தடுப்புச் சுவரைத் தாண்டி வெளிப்புறமாக தொங்கத் தொடங்கினார்.
சுமார் 100 அடி உயரத்தில் இளைஞர் தொங்கிக் கொண்டிருந்ததை பாலத்தின் கீழ் இருந்த பொதுமக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக கூச்சலிட்டு பாலத்தின் மேல் சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்தனர்.
இதையடுத்து அங்கு நின்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இணைந்து, ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞரை பத்திரமாக மேலே இழுத்து மீட்டனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இளைஞர் எந்த காரணத்திற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்பது குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. அவர் மதுபோதையில் இருந்தாரா அல்லது மனநலப் பிரச்சினையால் அவ்வாறு செயல்பட்டாரா என்பது குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், மீட்கப்பட்ட இளைஞரின் அடையாளம் மற்றும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Leave a Reply