15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநாட்டை நடத்த முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த 2010-ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாநாட்டுக்கான தொடக்க கட்ட ஏற்பாடுகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “உலகத் தமிழ் மாநாடு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து, தமிழ் மொழி, பண்பாடு, இலக்கியம் மற்றும் தமிழர்களின் பங்களிப்பை உலக அரங்கில் வலியுறுத்தும் வகையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது” என்றார்.
மேலும், “உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒரே தளத்தில் இணைப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும். மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.



Leave a Reply