மணி அடித்து விநாயகர் கோவிலில் வணங்கிய காட்டு யானை

Spread the love

கூடலுார் அருகே, காட்டு யானை ஒன்று விநாயகர் கோவில் மணியின் கயிற்றை இழுத்து, தும்பிக்கையை துாக்கி வணங்கிய செயல் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.

கூடலுார் பகுதியில் சமீப காலமாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகளவில் உலா வருகின்றன. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்தநிலையில், ஓவேலி மூலக்காடு கிராமத்தில் இரு நாட்களுக்கு முன்பு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள ஆற்றை கடந்து, விநாயகர் கோவில் அருகே சென்று, தும்பிக்கையில் கோவில் மணியில் கட்டப்பட்ட கயிற்றை இழுத்து, சுவாமியை வணங்கி சென்றது. இதனை அப்பகுதி மக்கள் பார்த்து வியப்படைந்தனர். சிலர் இதனை ‘வீடியோ’ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.