91 வருட பாரம்பரியமிக்க கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பட்டு மேளா – பழசுக்கு புதுசு சிறப்புத்தள்ளுபடி விற்பனை வ.உ.சி பார்க் கோவையில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ் மருதம் விற்பனை நிலையத்திலும் சாய்பாபா காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் விற்பனை நிலையத்திலும் நடைபெற்று வருகிறது.
பழசுக்கு புதுசு சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய பட்டுப் புடவைகளை மாற்றிக் கொண்டு அதற்கான மதிப்பில் தங்களுக்கு தேவைப்படும் வேறு எந்த இரகங்களையும் பெற்றுக்கொள்ளலாம். இவ் விற்பனைக்காக கண்கவர் வண்ணங்கள் மற்றும் வடிவமைப்புகளில் பட்டு சேலைகள், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், இயற்கை சாயமிட்ட பருத்தி காட்டன் சேலைகள் காஞ்சி காட்டன் சேலைகள், பரமக்குடி காட்டன் சேலைகள், சுங்குடி சேலைகள், படுக்கை விரிப்புகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ், நைட்டிகள், ஆடவர்களுக்கான லினன், ரிங்க்கிள் ஃப்ரீ, ஸ்லிம்ஃபிட் ரெடிமேட் சட்டைகள் ஏராளமாக வரவழைக்கப் பட்டுள்ளன.
கோ-ஆப்டெக்ஸ் கோவை மருதம் விற்பனை நிலையம், ஹேண்ட்லூம்ஸ் ஆஃப் இந்தியா பை கோ-ஆப்டெக்ஸ், ஸ்ரீபாலமுருகன் சாய்பாபாகாலனி, கிராஸ்கட்ரோடு ஆகிய விற்பனை நிலையங்களில் பழசுக்கு புதுசு மற்றும் 40 % முதல் 90 % வரையிலான சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
மாதாந்திர சேமிப்பு திட்டம் ரூ.300-லிருந்து ஆரம்பமாகிறது. வாடிக்கையாளர்கள் 11 மாத சந்தா தொகையை செலுத்தினால் 12-வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே செலுத்தும். சேமிப்புத்திட்ட வாடிக்கையாளர்கள் கூடுதல் முதிர்வுத் தொகைக்கு துணிகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் சேமிப்புத் திட்ட வாடிக்கை யாளர்களுக்கு மட்டும் கூடுதல் சலுகையாக வருடம் முழுவதும் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படும். இவ்வாறு அம்சவேணி, முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்தார்.
கோ-ஆப்டெக்ஸில் சிறப்புத் தள்ளுபடி விற்பனை மற்றும் பட்டு மேளா -முதுநிலை மண்டல மேலாளர் ப. அம்சவேணி தகவல்



Leave a Reply