கோவை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தவும், கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
மனுவில், கோவை மாநகர் மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள சங்கமம் நகரில், உரிய அனுமதியின்றி இரண்டு மசூதிகள் கட்டப்பட்டு வருவதாகவும், அவற்றின் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குனியமுத்தூர் பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலத்தை சில தனியார் அமைப்புகள் ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி, அந்த நிலத்தை மீட்டு கோவிலிடம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன், கோவை கோட்ட செயலாளர் உருவை பாலன், மாவட்ட செயல்தொடர்பாளர் தனபால், மாவட்டத் தலைவர் தசரதன், மாவட்ட துணைத் தலைவர்கள் பிரபாகரன், புவனேஸ்வரன், மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன், குணா, சோமசுந்தரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனுவை வழங்கினர்.
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் விளக்கம் வெளியாகவில்லை.



Leave a Reply