கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் சரத்குமார் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை கண்டித்தும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, காவல்துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், கோவை மாநகர மேயர் ரங்கநாயகி, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா, வழக்கறிஞர்கள் ராஜேந்திரன், கணேஷ்குமார், அணி அமைப்பாளர்கள் அன்புசெழியன், தனபால், பாபு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.



Leave a Reply