அம்பாசமுத்திரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்து விட்டார். இதையடுத்து, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நாடார் வாக்குகள் அதிகமுள்ள இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பொது வேட்பாளராக நிறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் சீமான் பொது வேட்பாளராக களமிறங்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்காக, சீமானிடத்தில் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தெரிகிறது. சட்டமன்றத்தில் தவெகவுக்கு தக்க பதிலடி கொடுக்க சீமான்தான் சரியான தேர்வாக இருக்குமென்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதனால், சீமானுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.
கடந்த தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், 30 ஆயிரம் வாக்குகளை தனித்து நின்று பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply