உலகக் கோப்பையில் மந்திரவாதிகள் தந்திரம் செய்கின்றரா?

Spread the love

இந்தியாவில் மந்திரவாதிகள் உலவுவது போல ஆப்ரிக்க நாடுகளிலும் மந்திரவாதிகள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்டு.  கானா மக்களிடத்தில் புகழ்பெற்ற ஒரு மந்திரவாதி இருக்கிறார். அவரது பெயர், நானா கவாகு போன்ஸம் . இந்த பெயருக்கு தமிழிலில் சொல்ல வேண்டுமென்றால்’ புதன்கிழமை பேய் ‘ என்று அர்த்தமாம். போன்சம் ஒரு சாதாரண மந்திரவாதி அல்ல. நியூயார்க்கின் பிராங்ஸ் பகுதியில் கானா நாட்டு மக்களிடத்தில்தான் இவரும் வசித்தார். அங்கு, தனக்கென ஒரு ஆதரவுக் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். பின்னர், அவர் தாயகம் திரும்பியபோது, குமாசி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர் . இவருக்கு, சொந்தமா காடிலாக் கார் வைத்திருக்கிறார். விலையுயர்ந்த ஆடைகளை அணிவார். மிகப் பெரிய கால்நடைப்பண்ணைக்கு அதிபதி. பல மந்திரதந்திர பள்ளிகளையும் நடத்தி வருகிறார். இந்த மத்திரவாதிக்கு 14 குழந்தைகளும் உண்டு  நியூயார்க், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களில் வசித்துள்ளார். புகழ்பெற்ற நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையே இவரைப்பற்றி கட்டுரை எழுதியுள்ளது.

இப்போது, இந்த மந்திரவாதியை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் வந்துள்ளது. உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி கானா அணியுடன் மோதியது. இந்த ஆட்டம் 0-0 என்று டிரா ஆனது. இங்கிலாந்து கேப்டன் ஹாரிகேன் பல கோல் வாய்ப்புகளை வீணடிந்தார். இந்த சூழலில், கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை கட்டுக்குள் வைத்து, தங்கள் அணிக்கு எதிராக கோல் அடிக்க விடாமல் செய்ததாக மந்திரவாதி போன்ஸம் கூறியுள்ளார். இது குறித்து டெய்லி ஸ்டார் பத்திரிகைக்கு போஸ்னம் அளித்துள்ள பேட்டியில் , ”கானாவுக்கு எதிராக இங்கிலாந்து மோதிய போது, ஹாரி கேனை கட்டுப்படுத்தி கோல் அடிக்க விடாமல் செய்தேன். இதற்காக, மந்திரங்கள் செய்தேன். அவருக்கு சீரியசாக காயம் ஏற்பட நான் எந்த மந்திரமும் செய்யவில்லை. ஆனுல்,  அவரால் கோல் அடிக்க முடியாமல் மட்டும் செய்தேன் ”என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, கானா மக்கள் போஸ்னத்தை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். ஏனென்றால், கானா மக்கள் மந்திர தந்திரத்தில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டவர்கள். ஆப்ரிக்கக் கோப்பை கால்பந்து தொடரின் போது,  மந்திர தந்திரங்கள் கதை கதையாக பேசப்படும். கடந்த 2025 ம் ஆண்டு மொராக்கோவில் ஆப்ரிக்க கோப்பை இறுதி ஆட்டம் நடந்தது. இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணி செனகல் அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது , செனகல் கோல்கீப்பர் எடுவார்ட் மெண்டி(Édouard Mendy)பந்தின் ஈரப்பதத்தை துடைப்பதற்காக சிறிய துண்டை பயன்படுத்தி வந்தார். பந்து தன்னிடத்தில் வரும் போதெல்லாம், துண்டை கொண்டு பந்தை துடைத்தார். இந்த துண்டில் ஏதோ மந்திரம் இருப்பதாக கருதிய மெராக்கோ நாட்டு பால் பாய்ஸ் மென்டி பயன்படுத்திய துண்டை எடுத்து தூர வீச முயன்றனர். மொராக்கோ அணி வீரர்களும் அந்த துண்டை கைப்பற்ற முயன்றனர். இதற்காக, ஒரு மொராக்கோ வீரர் ஆப்ரிக்க கால்பந்து சங்கத்தால் சஸ்பென்ட்டும் செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் களத்தில் செனகல் வென்றது. ஆனால், நடுவரின் முடிவை எதிர்த்து செனகல் வீரர்கள் 15 நிமிடங்கள் களத்தை விட்டு வெளியேறியிருந்தனர். இந்த காரணத்துக்காக செனகல் அணியிடம் இருந்து கோப்பை பறிக்கப்பட்டு, மொராக்கோ சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.