கொடிசியா தலைவராக வி.ரங்கசாமி தேர்வு

Spread the love

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கமான கொடிசியாவின் 57-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 2026–2028-ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, கொடிசியாவின் புதிய தலைவராக வி. ரங்கசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கொடிசியாவின் 30-வது தலைவராக அவர் பொறுப்பேற்கிறார்.
மேலும், கௌரவச் செயலாளராக விஜய் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டார். இதனுடன் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் 2026–2028 காலகட்டத்திற்காக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்குழுக் கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி தொடர்பான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.