கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். முன்னாள் அதிமுக நிர்வாகி வசந்த் சண்முகம் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்க ப்பட்டது.
நிகழ்ச்சியில் அமைச்ச ர்கள் கமலி மற்றும் அருண்ராஜ் பங்கேற்று, புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். இந்த இணைப்பு கட்சியின் வளர்ச்சிக்கும், எதிர்கால அரசியல் திட்டங்களுக்கும் முக்கியமானதாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண்ராஜிடம், தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஏற்கனவே சில பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் நிலையில், இதுவரை தொகை பெறாத பெண்களுக்கு எப்போது வழங்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், சில நொடிகள் அமைதியாக இருந்த பின்னர், “தற்போது மாநிலத்தின் நிதிநிலை சரியாக இல்லை” என பதிலளித்ததாக கூறப் படுகிறது. அமைச்சரின் இந்த பதில் அரசியல் மற்றும் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
அதேபோல், அன்னூர் அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்து நிலைமையை அறிந்த பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்று அமைச்சர் கூறினார்.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த அமைச்சரின் கருத்து, மாநில அரசின் நிதிநிலை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தும் நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அரசுத் தரப்பின் அடுத்தகட்ட விளக்கத்தை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் காத்திருக்கின்றனர்.
மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் கிடைக்குமா அமைச்சர் அருண்ராஜ் பதில்



Leave a Reply