கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரில் அமைந்துள்ள புற்றுக்கண் மாரியப்பன் கோயில் 44வது குண்டம் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூர் பொன்னிநகரில் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் 44வது குண்டம் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14ம் தேதி பூக்கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் கோயில் வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வரும் 28ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 8.30மணிக்கு தீகுண்டம் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், 29ம் தேதி காலை 11 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குகின்றனர். மாலை 4 அணிக்கு மாவிளக்கு பூஜை, இரவு வானவேடிக்கை நடைபெறுகிறது. மே 1ம் தேதி காலை 10 மணி முதல் அன்னதானம் வழங்கப்படுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புற்றுக்கண் மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.



Leave a Reply