அவிநாசியில் 100 சதவிகிதம் வெற்றி – எல். முருகம் நம்பிக்கை

lmurugan
Spread the love
பழநியில், முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய, மத்திய இணை அமைச்சரும் அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான எல்.முருகன் வந்தார். இவரது வாகனம், தேர்தல் விதிமுறை காரணமாக, கிரி வீதியில் அனுமதிக்கப்படவில்லை. இதனால், பேட்டரி பஸ் வாயிலாக, ரோப் கார் இயக்கும் இடத்துக்கு சென்று, அங்கிருந்து ரோப் காரில், பழநி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின், அடிவாரம் வந்த அவர் கூறுகையில், ”  ஜனநாயக முறையில் அமைதியாக தேர்தல் நடந்துள்ளது. தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது அவர்களின் தோல்வி பயத்தை காட்டுகிறது. அவிநாசி தொகுதியில், 100 சதவீதம் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறோம். எங்கள் வெற்றி, தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.க., அரசின் மீது மக்களுக்கு உள்ள கோபத்தின் வெளிப்பாடு தான், இந்த தேர்தலில் ‘விறு விறு’ என அதிகளவில் ஓட்டுப் பதிவு நடந்துள்ளது. தி.மு.க., அரசை அகற்றவே மக்கள் ஓட்டளித்துள்ளனர். பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.,வின் வளர்ச்சி வேகம் சிறப்பாக உள்ளது. தி.மு.க., அரசின் செயல்பாடு ஜீரோ தான்.

இவ்வாறு கூறினார்.