விரியன் பாம்புக்கும் நாகத்துக்கும் விஷப் பல்லில் உள்ள வித்தியாசம்

Spread the love
இந்தியாவில் அதிக அளவில் பாம்புகள் வசிக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவில் 30 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான மக்கள் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். சர்வதேச அளவில் பாம்புக்கடியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில்தான் மிக அதிகம் .நாட்டில் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் வெயிலின் அளவு கூடும்போது பாம்புக் கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன. தற்போது, கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால், மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்குள் பாம்புகள் வர வாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளது.

இந்தியாவில் பிக் 4 என்று சொல்லப்படும் 4 விஷப்பாம்கள் கடியால்தான் அதிக உயிரிழப்புகள் நடக்கிறது . அதாவது, நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் பாம்புகளால்தான் அதிக மக்கள் கொல்லப்படுகின்றனர்.

பொதுவாக விஷப்பாம்புகளில் விரியன் ரக பாம்புகளின் பற்கள்தான் மிக நீளமாக இருக்கும். இவை, அட்டாக் செய்யும் வேகமும் அதிகம். பாம்புகளின் தலையில் அவற்றின் கோரை பற்கள் அமைந்துள்ள பகுதிக்கு மேலை கண்களுக்கு கீழே விஷப்பை அமைந்துள்ளது. விரியன் ரக பாம்புகள் வேகமாக அட்டாக் செய்வதாக், தாக்கிய இடத்தில் ஊசி போல பற்களை இறக்கி அதிகமான விஷத்தை உடலுக்குள் செலுத்தி விடும். பொதுவாக, பாம்பு கடித்த இடத்தில் இரு பற்களின் தடம் மட்டுமே காணப்படும். அப்படியென்றால், விரியன் ரக பாம்பு நம்மை கடித்துள்ளதாக உறுதியாக நம்பலாம். அதே வேளையில், விஷமற்ற பாம்புகள் கடித்தால் பல பற்களின் தடம் கடிபட்ட இடத்தில் காணப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாம்பு கடித்து விட்டால்,உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது சாலசிறந்தது.