போத்தனூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
கடந்த 1934 ம் ஆண்டு பிப்ரவரி 7 மற்றும் 7 தேதியில் மகாத்மா காந்தியடிகள் கோவை வந்தார். போத்தனூரிலுள்ள ஜி.டி. நாயுடு குடும்பத்துக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்து தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் தங்கி இருந்த வீடு தான் கடந்த 2022ம் ஆண்டு முதல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது . இந்த வீட்டில் தங்கியிருந்த போது, காந்தி பயன்படுத்திய பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை, முதல்வர் பார்வையிட்டு விவரங்களை கேட்டு அறிந்தார். அப்போது, மகாத்மா காந்தியடிகளுக்கு பிடித்தமான ‘ரகுபதி ராகவ ராஜாராம் ‘ பஜனை பாடலை பாரதீய வித்யா பவன் பள்ளி மாணவ, மாணவியர் பாடியதை முதல்வர் கேட்டு ரசித்தார். வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து செண்பக மரக்கன்று ஒன்றை நட்டினார்.
நிகழ்ச்சியில் பாரதீய வித்யா பவன் கோவை மைய தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.



Leave a Reply