வேலூரில் பிப்ரவரி 23-ந் தேதி நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது, தூய சக்தி டிவிகேவுக்கும் தீய சக்தி டிஎம்கேவுக்கும் தான் இந்தப் போர். அவரோட ஆட்சியில தான் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமா இருக்குதாம். கரெக்டு, தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலம் தான். காமராஜர் அவர்கள் டைம்ல அண்ணா அவர்கள் டைம்ல எம்ஜிஆர் அவர்களோட ஆட்சியில.. இன்னைக்கு ஒண்ணுக்கும் உதவாத இந்த உல்ட்டா மாடல் ஆட்சியில தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமா எல்லாம் ஒண்ணும் இல்ல. சூப்பர் ஸ்டாண்டப் காமெடிக்காரர் நடத்துற மாநிலமா மாறிடுச்சு.
மக்களே! உங்களுக்காக தான். உங்களுக்காக மட்டுமே தான் வர தடைகள், சதிகள், சூழ்ச்சிகள் எல்லாத்தையும் தாண்டி இந்த 2026 தேர்தல்ல டிவிகே தில்லா நிக்கும். இதுவரைக்கும் நடந்த எலக்ஷன் வேற. இப்ப நடக்கப்போற எலக்ஷன் வேற
ஒவ்வொரு ஐந்து வருஷத்துக்கும் நடக்குற எலக்ஷன் மாதிரி நினைச்சுறாதீங்க. அம்பது வருஷத்துக்கு ஒரு வாட்டி நடக்கப்போற ஒரு எலக்க்ஷன் மாதிரி இது அதிசய எலக்க்ஷன். ஒரு எலக்க்ஷன்ல அவங்க அவங்களோட எதிரிகளைத் தான் எதிர்ப்பாங்க. அப்படி தான் எதிர்ப்பாங்க. அது தான் எதார்த்தமும் கூட. ஆனா இந்த எலக்க்ஷன்ல தான் ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கிறாங்க. ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து இந்த விஜயை எதிர்க்கிறாங்க. ஏன்னா, இந்த விஜய் ஊழலை எதிர்க்கிறான். லஞ்சத்தை எதிர்க்கிறான். மக்களோட மக்களா நிக்கிறான். அந்த மக்கள் அவன்கூட நிக்கறாங்க. அப்படி அந்தக் காண்டு தான் ஒட்டுமொத்தமா எல்லாருமா சேர்ந்து ஒருத்தனை எதிர்க்கக் காரணம்.
இந்த தேர்தல்ல உங்க வீட்டுல இருக்குற ஒரு விஜய் தான் வேட்பாளரா நிக்கப்போறாங்க. எனக்கு அரசியல் தெரியலன்னு சொன்னா அது மக்களுக்கு அரசியல் தெரியலன்னு சொல்ற மாதிரினு. என்னை அசிங்க அசிங்கமா பேசுனா அது மக்களை அசிங்க அசிங்கமா பேசுற மாதிரினு. எனக்கு எதிரா செய்ற ஒவ்வொரு செயலும் அது மக்களுக்கு எதிரா செய்ற செயல்னு அவங்களுக்கு தெரியாம போச்சு.இந்த விஜயும் மக்களும் வேறு வேறு இல்லை. இந்த விஜயும் மக்களும் ரத்தமும் சதையும் மாதிரி உடலும் உயிரும் மாதிரி ஒண்ணுலிருந்து ஒன்னு பிரிக்கவே முடியாது.
நீங்க அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி உங்ககிட்ட இருந்த சொத்து எவ்ளோ? அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம் இன்னைக்கு உங்ககிட்ட இருக்குற சொத்து எவ்ளோ? அத ஓப்பனா டிக்ளேர் பண்ண முடியுமா? அப்படி வந்த காசு எல்லாம் என்னென்ன தொழில் செஞ்சு வந்துச்சு? என்ன வேலை செஞ்சு வந்துச்சு? உண்மையில நீங்க உழைச்சு சம்பாதிச்ச காசா இல்ல. ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததுக்கு அப்புறம் ஆட்டைய போட்ட காசா…. இதெல்லாம் ஓப்பனா டிக்ளேர் பண்ண முடியுமா? இதெல்லாம் நாம கேட்டா எல்லா ஊழல்வாதிகளும் ஒண்ணா சேர்ந்து நம்ம மேல சேத்த வாரி வீசுவாங்க. அதைப் பத்தி எல்லாம் நமக்குக் கவலை இல்லை. ஏன்னா நாம யாருன்னு மக்களுக்கு நல்லாவே தெரியும்.
கரூர் விஷயத்துல என் மேல பழியை தூக்கி போட்டீங்க? உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருந்தா அப்படி பேசிட்டு இருப்பீங்களா? அப்படின்னு நாங்க எல்லாம் உங்களுக்கு நண்பர்கள்னா ஒரு ஈவெண்ட் ஒரு ஃபங்ஷன் நடத்துறதுக்கு ஒரு இடமோ ஒரு பர்மிஷனோ ஏன் கொடுக்க மாட்டேங்குறீங்க? உங்களோட உண்மையான நண்பர்கள் யாருன்னு சொல்லட்டுமா? லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம் இது எல்லாம் தான் உங்களோட உண்மையான நண்பர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.



Leave a Reply