இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் ஆய்வு நிறுவனம் பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து கடந்த 12 வருடங்களாக நடத்திய ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், புதுச்சேரியில்தான் அதிகம் பேர் குண்டாக உள்ளனராம். அதாவது, இந்த குட்டி மாநிலத்தில் 45.9 சதவிகிதம் பேர் குண்டாக உள்ளனர். கேரளா 43.6 சதிகிவிதத்துடன் இரண்டாவது இடத்தையும் டெல்லி 41.8 சதவிதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தொப்பை அதிகமுள்ள மக்கள் நிறைந்த மாநிலங்களில் கேரளா 582 சதவிகிதத்துடன் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் 57.2 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும் ஹரியானா 56.3 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இடுப்பளவு ஆண்களுக்கு 90 செ.மீக்கு மேல் பெண்களுக்கு 80 செ.மீக்கு மேல் இருந்தால் தொப்பை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் 39.5 சதவிகிதம் பேர் தொப்பை கொண்டவர்களாகவும் 28.6 சதவிகிதம் பேர் ஒட்டு மொத்தமாக குண்டாக இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது, இந்தியாவில் 55 கோடி மக்கள் தொப்பை கொண்டவர்கள். 40 கோடி மக்கள் ஒட்டு மொத்தமாக குண்டாக உள்ளனர்.
சரியான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதது, உடற்பயிற்சி இல்லாமை, வேலைப்பளு போன்றவை பலருக்கும் தொப்பை ஏற்பட முக்கிய காரணியாக அமைந்துள்ளது. குண்டாக இருப்பது பல்வேறு உடல் கோளாறுகளுக்கு வித்திடும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



Leave a Reply