தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்: கனிமொழி எம்.பி

Spread the love

மதுரை: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு தொடர்பாக காங்கிரஸ் கட்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி முடிவெடுப்பார் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை கேட்டுவருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்படும் கோரிக்கைகள் தொகுக்கப்பட்டு தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்” என்றார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கனிமொழி, “அண்ணாமலை கனவு உலகத்தில் பேசுகிறார். ஒன்றிய அரசு நிதி வழங்காததால்தான் பல திட்டங்கள் தாமதமாகின்றன. உண்மையை அறியாமல் தமிழக அரசின் மீது குற்றம்சாட்டுவது நியாயமல்ல” என்றார்.

மேலும், “திமுக ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களில் நிலைமை என்ன என்பதை பேச வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *