மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் சுமார் 90 பேருக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே இந்த பாதிப்பு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரபல மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் பணியிடங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிழக்கு பர்தமான் மாவட்டத்தில் 50 பேருக்கு மட்டுமே எச்ஐவி பாதிப்பு இருந்த நிலையில், தற்போது அது 90 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பற்ற பாலியல் உறவுகள் காரணமாகவே இந்த நோய் பரவல் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ச்சியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், நோய் பரவிய விதம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டம் முழுவதும் எச்ஐவி குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி ஜெயராம் ஹெம்பிரோம் தெரிவித்துள்ளார்.



Leave a Reply