குளிர்காலம் வந்ததும் பெரும்பாலானவர்கள் தண்ணீர் குடிப்பதை குறைத்து கொள்கின்றனர். காரணம், குளிர் காலத்தில் தாகம் குறைவாக ஏற்படுவது, வியர்வை குறைவாக வெளியேறுவது மற்றும் சிறுநீர் அதிகம் வெளியேறுவதாக இருக்கும். இதனால், பலரும் “குளிர்காலத்தில் குறைந்த தண்ணீர் போதும்” என்ற தவறான கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில், குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பது உடல்நலத்திற்கு மிகவும் அவசியம்.
உடல் சுமார் 70 சதவீதம் நீரால் ஆனது. இதனால், அனைத்து உடல் செயல்பாடுகளுக்கும் தண்ணீர் அவசியம். இதன் மூலம் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன, உடல் உழைப்பு சரியான அளவில் நடைபெறுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிக நேரம் வீட்டிலோ அலுவலகத்திலோ உட்கார்ந்து இருப்பவர்கள், ஒரு நாளைக்கு சுமார் 8-10 கிளாஸ் (2-2.5 லிட்டர்) தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக உடல் உழைப்பு இருப்பவர்கள், உடற்பயிற்சி அதிகமாக செய்யும் அல்லது வெளியில் வேலை செய்பவர்கள், 10-12 கிளாஸ் (2.5-3 லிட்டர்) தண்ணீர் பருக வேண்டும்.
குளிர்காலத்தில் குறைந்த தண்ணீர் குடிப்பதால் உடல் நீரிழப்புக்கு ஆபத்து ஏற்படும். சரும ஆரோக்கியம் பாதுகாப்பு: சருமம் உலர்வதை தடுக்கும் மற்றும் சீரான தோலை உறுதிப்படுத்தும்.
நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக்கம்: சரியான நீர் அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களை தடுக்க உதவும்.
உடல் சோர்வு குறைதல்: நீரின்மை காரணமாக ஏற்படும் உடல் சோர்வு, மனஅழுத்தம் போன்றவை குறைகிறது.
குளிர்ந்த ஜில்லென்ற நீரை அதிகமாக குடிப்பது, தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் தவிர்க்க வேண்டும். தினசரி வழக்கமாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்குவது, உடல்நலனுக்கும் நோய் தடுப்பு சக்திக்கும் மிக முக்கியம். குளிர்காலத்தில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது, சரும உலர்ச்சி, திணறல், சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதனால், குளிர்காலத்தில் கூட தினசரி தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.



Leave a Reply