தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்: அறிவிப்பு இன்று வெளியாகிறது

Spread the love

தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகியுள்ளது.

பீகாரில் செயல்படுத்தப்பட்ட முதல்கட்ட பணிகள் போன்று, நாடு முழுவதும் 10 முதல் 15 மாநிலங்களில் இந்த செயல்முறையை தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் பணிச்சுமையை குறைக்கவும், அவர்களுக்கு உதவி வழங்கவும் தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இந்த தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப உதவி செய்வதோடு, தேவையெனில் அதிகாரிகளை மாற்றாகவும் பணியாற்ற வாய்ப்பிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன், தகுதியான ஒவ்வொரு நபரும் வாக்காளர் பட்டியலில் சேர்வதை உறுதி செய்வது இந்த திருத்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.