தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை வரை உற்சாகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு மழை இல்லாததால், பட்டாசு விற்பனை சாதனை அளவில் நடந்தது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மக்கள் குடும்பத்துடன் தீவுத்திடல்களுக்குச் சென்று பட்டாசுகளை வாங்கி வெடித்தனர். சில நேரங்களில் சிறிய மழை பெய்தாலும், உடனே நின்றதால் கொண்டாட்டம் தடையின்றி நடைபெற்றது.
இதன் விளைவாக கடந்த 3 நாட்களில் சென்னை முழுவதும் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
15 மண்டலங்களிலும் தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் தண்டையார்பேட்டை மண்டலத்தில் அதிகபட்சமாக 17 மெட்ரிக் டன், ஆலந்தூரில் 13 மெட்ரிக் டன், கோடம்பாக்கம் மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா 12 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
மாநகராட்சி, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு நகரம் சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.



Leave a Reply