கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

Spread the love
கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) சார்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கமானது கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக நிகழ்வில் பங்கேற்றோரை வரவேற்கும் முகமாக சுயநிதிப்பிரிவுத் தமிழ்த்துறைத்தலைவர்(பொ.) முனைவர் அ.இராஜலட்சுமி வரவேற்புரை வழங்கினார்.

முதல்வர் முனைவர் வே.சங்கீதா  அம்மா தலைமை தாங்கி,  தமிழ் வளர்ச்சி மன்றத்தின் தலைவர்,  நிறுவனர் ஆஸ்திரேலியா உச்சநீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் பாரிஸ்டர், தமிழக அரசின் தமிழறிஞர் விருதாளர் முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் எழுதிய 70 ஆவது நூலான  ’மாமதுரை போற்றுதும்’’ நூல்  வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆஸ்திரேலியா தமிழ் மாணவர்கள், ஆர்வலர்கள் எழுதிய “எத்திசையும் மணக்கும் தமிழ்” நூலையும் முதுகலை தமிழிலக்கியம் இரண்டாமாண்டு மாணவி பி.சரண்யா எழுதிய “மனத்தின் மலர்கள்” நூலையும் வெளியிட்டார். மாணவர் மன்றம் சார்பாக குறும்படக்காட்சி ஒன்று திரையிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு)  தமிழ் வளார்ச்சி மன்றம், சிட்னி, ஆஸ்திரேலியாவும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டனர்.  முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் ’தமிழும் தொழில் நுட்பமும்’  எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார், நிறைவாக முனைவர் பி.பத்மினி நன்றியுரை நிகழ்த்தினார்.