டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகாதேவி காலமானார் – திமுக வட்டாரத்தில் இரங்கல் அலை!

Spread the love

திமுக பொருளாளர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (வயது 79) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.

நுரையீரல் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த ரேணுகாதேவி கடந்த சில மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அன்னாரின் உடல் தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேணுகாதேவியின் மறைவு குறித்து பல்வேறு தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். திமுக வட்டாரத்தில் இது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.