குறைந்தபட்ச ஊதியம் ₹26,910 கோரி மருந்து விற்பனை பிரதிநிதிகள் கோவையில் போராட்டம்!

Spread the love

தமிழ்நாடு மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் கோவை மாவட்டக் குழுவின் ஏற்பாட்டில், மருந்து விற்பனை பிரதிநிதிகள் திங்கள்கிழமை கோவையில் உரிய சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பி. மனோஜ்குமார் தலைமையிலானார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ. முகமது ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

  • எஸ்பிஇ சட்டம் 1976–ஐ முழுமையாக பாதுகாக்க வேண்டும்.

  • தொழிலாளர் நலன் குறைக்கும் புதிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

  • எஸ்பிஇ சட்டத்தை செயல்படுத்தாத நிறுவனங்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • விற்பனை அபிவிருத்தி பணியை தொழில்துறை என அரசு அங்கீகரிக்க வேண்டும்.

  • எட்டு மணி நேர வேலை நேரம் கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.

  • குறைந்தபட்ச ஊதியம் ₹26,910 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.

அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் சம்மேளன மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. வினோஜ் ரமானுஜம், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ஆர். வேல்சாமி உள்ளிட்டோர் உரையாற்றி போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இணைச் செயலாளர் மணிகண்டன் நன்றியுரையாற்றினார்.