TNTET 2025 தேர்வு தேதி மாற்றம் – நவம்பர் 15 மற்றும் 16ல் நடைபெறும்!

Spread the love

2025ஆம் ஆண்டு நடைபெவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) அறிவித்துள்ளது.

முன்னதாக, TNTET தாள் I மற்றும் தாள் II தேர்வுகள் முறையே நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நவம்பர் 1 ஆம் தேதி கிறிஸ்தவ மக்களின் கல்லறைத் திருநாளுடன் மோதுவதால், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நிர்வாக காரணங்களினால் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி,
🔹 தாள் I – நவம்பர் 15, 2025
🔹 தாள் II – நவம்பர் 16, 2025
அன்று நடைபெறும் என TRB தெரிவித்துள்ளது.

மேலும், TNTET தேர்வை பற்றிய மேலதிக தகவல்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.


🗓️ தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தயார் நிலையில் இருங்கள்!
அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் நம்புங்கள்.