தீபாவளி ரயில் பயணத்திற்கு 20% கட்டண சலுகை – நாளை மறுநாள் முன்பதிவு தொடக்கம்!

Spread the love

இந்திய முழுவதும் சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே பயணிகளை மகிழ்விப்பதற்கான சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2025ஆம் ஆண்டு தீபாவளி அக்டோபர் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) வருவதால், பெரும்பாலானோர் அதற்கு முந்தைய வாரம் சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்கேற்ப, அக்டோபர் 17 (வெள்ளி), 18 (சனி) ஆகிய தேதிகளில் ரயிலில் பயணிக்க விருப்பவர்கள் ஆகஸ்ட் 16 மற்றும் 17 தேதிகளில் முன்பதிவு செய்யத் தயாராக வேண்டும்.


🎉 20% கட்டண சலுகை அறிவிப்பு:

அக்டோபர் 13 முதல் 26 வரை சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணத்திற்கும்,
நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 வரை மீண்டும் திரும்பும் பயணத்திற்குமான
இருவழிப் பயணச்சீட்டுகளை ஒரே நேரத்தில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு
20% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.

🗓️ முன்பதிவு தொடங்கும் தேதி:
ஆகஸ்ட் 14, 2025 முதல்


📌 சலுகை விதிமுறைகள்:

  • இரு பயணங்களும் ஒரே வகுப்பு, ஒரே ரயிலில் இருக்க வேண்டும்.

  • ஒரே ஊருக்கு சென்று திரும்பும் பயணம் மட்டுமே தகுதி பெறும்.

  • இந்த சலுகை உள்ளடங்கிய பயணச்சீட்டுகளுக்கு ரீஃபண்ட் கிடையாது.

  • சலுகை பயண சீட்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாத குறிப்பிட்ட தேதிகளுக்குள் மட்டுமே.