திருப்பதி திருமலையில் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் கருட பஞ்சமி விழா, இவ்வாண்டு ஜூலை 29-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. விழாவின் சிறப்புநாளன்று, திருமலை மலையப்ப சுவாமி தனது விருப்பமான கருட வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் திரளும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவஸ்தானம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பக்தர்கள் ஒழுங்கை பின்பற்றி, பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், விழாவின் போது எந்தவொரு விதமான குழப்பமும், சட்டவிரோத செயல்களும் நிகழ்ந்தால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் கடுமையாக எச்சரித்துள்ளது.
பகவானின் கருணை பெற்ற நாளாகக் கருதப்படும் கருட பஞ்சமி நாளில், கருடன் மீது எழுந்தருளும் மலையப்ப சுவாமியை தரிசிப்பது பக்தர்களுக்குப் பெரும் பாக்கியமாக கருதப்படுகிறது. விழாவை முன்னிட்டு, தேவஸ்தானம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.
Leave a Reply