கோவை சென்ட்ரல் லயன்ஸ் சங்கம் 2025–2026 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோவையில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் கல்வி ஊக்கத்தொகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் ஆலந்துறை மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் முதலாம் துணை ஆளுநர் PS செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரிய நந்தகோபால், GST ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார் மற்றும் மாவட்டத் தலைவர் லயன் பார்த்தசாரதி இணைந்து சேவை திட்டங்களை வழங்கினர். புதிய நிர்வாகிகளாக லயன் இளங்கோவன் தலைவராகவும், லயன் சிவராஜ் நிர்வாகச் செயலாளராகவும், லயன் செந்தில்குமார் செயல் செயலாளராகவும், லயன் கோபாலகிருஷ்ணன் பொருளாளராகவும் பதவியேற்றனர். இவர்களை மாவட்ட ஆளுநர் நித்தியானந்தம் பதவியில் அமர்த்தினார்.
விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் தேர்வு ராஜசேகர் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர் ராம்குமார் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். லயன்ஸ் சட்டத் திட்டங்களோடு லயன் பாஸ்கர் புதிய உறுப்பினர்களை இணைத்தார்.
வட்டாரத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர், GLT ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
கோவை லயன்ஸ்: நிர்வாக மாற்றம் & சேவை

Leave a Reply