தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத்தின் 73-வது ஆண்டு விழா; அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு!

Spread the love

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஜென்னிஸ் ஹோட்டலில் தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத்தின் 73-வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில், தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத்தின் தலைவர் வினோதன் கந்தையா, தென்னிந்திய தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத்தின் (உப்பாசி – UPASI) தலைவர் அனில் மேத்யூ, இந்திய தேயிலை வாரியத்தின் (குன்னூர்) செயல் இயக்குநர் பரணிகுமார், துணைத் தலைவர் சந்தீப் சிங் சித்து, செயலாளர் பிரதீப் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விழாவின் முத்தாய்ப்பாக, பள்ளிப் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவியருக்குச் சான்றிதழ்களும் ஊக்கத்தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.