, ,

3 நிலச்சரிவுகள்……. 45 பேர் மரணம் – அச்சம் தரும் வயநாடு

kerala-landslade 1
Spread the love

கேரளா மாநிலம் வயநாடு அருகே உள்ள சூரல்மலைப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 45-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் இந்த நிலச்சரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அப்பகுதியில் உள்ள ஆறுகளில் காட்டாற்று  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வயநாடு சூரல்மலை பகுதியில் கேரளா மின்சார வாரியம் கட்டிய அணையும் நிரம்பியதால்,  நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  சூரல்மலை பகுதியில் இடைவிடாத பெய்துவரும் கனமழை காரணமாக திங்கள் முதலே சில இடங்களில் லேசான நிலச்சரிவுகள்  ஏற்பட்டன. தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக  முன்னெச்சரிக்கை அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து  அதிகாலை 4 மணிக்கு மீண்டும் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அட்டமலையில் இருந்து முண்டகை செல்வதற்கு இருந்த ஒரே ஒரு பாலமும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.  அடுத்தடுத்து ஏற்பட்ட  நிலச்சரிவுகளால் வயநாடு சூரல்மலையில்  500க்கும்  மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த மற்ற கிராம மக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ள வேளையில், கண்ணூரில் இருந்து இந்திய ராணுவம் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளது. இதேபோல், தமிழகத்தின் குன்னூரில் இருந்தும் ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்கு விரைந்துள்ளனர். இதனிடையே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை விஜயனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்த பேரிடர் காலத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக உறுதியளித்தார்.  மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படுமெனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.