,

14.2 கிலோவுக்கு பதிலாக 10 கிலோ கேஸ் மட்டுமே நிரப்ப முடிவு!

Spread the love

வளைகுடா போர் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தியா தனது சமையல் எரி வாயு தேவைக்காக 60 சதவிகிதம் வெளிநாடுகளையே நம்பியுள்ளது. ஈரானின் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே, இந்தியாவுக்கு எரிவாயு நிரப்பிய கப்பல்கள் வரவேண்டும். தற்போது, போர் காரணமாக கப்பல் வரத்து முடங்கியிருப்பதால், இந்தியாவில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சப்ளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம், இரண்டு ,இந்தியக் கப்பல்கள் மட்டுமே ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து வந்தன. இந்த கப்பல்கள் மொத்தம் 92,700 டன் எரிவாயுவை கொண்டு வந்தன. இந்தியாவின் ஒருநாள் தேவை இது.

இந்த நிலையில், பரவலாக அனைத்து மக்களுக்கும் சமையல் எரிவாயு கிடைப்பதற்காக புதிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டரில் 10 கிலோ மட்டுமே நிரப்பி வீடுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 14.2 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் பொதுவாக 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 35 முதல் 40 நாட்களுக்கு ஒரு வீட்டின் கேஸ் தேவையை நிரப்புகிறது. 10 கிலோ நிரப்பினாலும், கிட்டத்தட்ட 30 நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என்று நம்பப்பபடுகிறது.