கோவையில் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்த தின விழா!

Spread the love

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக, முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அமரர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் 137-வது பிறந்த  தின விழா இன்று கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான காமராஜ் பவனில், கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. கவுன்சிலர் சங்கர் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர்கள் பாசமலர் சண்முகம், ஜெர்ரி லூயிஸ், ஜனார்த்தனன், தாமஸ், நாகராஜ், பறக்கும்படை ராஜ்குமார், பிரபு, தனபால், முருகேசன், சண்முகம், சிவபெருமாள், வில்சன், மதன், முனுசாமி, சுரேஷ்குமார், செந்தில்குமார், பழனிச்சாமி, முத்துராமன், மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *