ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த ஆண்டு என்.ஐ.சி.யு வில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட குறைப்பிரசவ குழந்தைகளின் குடும்பத்தினருடன் உலக குறைமாத குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், மருத்துவ இயக்குனர் டாக்டர். எஸ். ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்..அழகப்பன், ஜூனியர் மருத்துவர்கள், என்.ஐ.சி.யு.செவிலியர்கள், பெற்றோர்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
வரும் தலைமுறையினருக்கு இந்த கொண்டாட்டம் ஒரு உத்வேகமாக அமையும் என்றும், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்கு என்.ஐ.சி.யு செவிலியர்களை தொடர்ந்து சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் என்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சித்தார்த்த புத்தவரபு கூறினார். மேலும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கு சிறப்பு கவனிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். அதிநவீன சிகிச்சை முறைகளை பயன்படுத்தி என்.ஐ.சி.யு -வில் பச்சிளம் குழந்தைகளை பராமரிப்பது சவாலானது என்று பச்சிளம் குழந்தைகள் மருத்துவர் டாக்டர் சுஜா மரியம் கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உள்ள என்.ஐ.சி.யு பிரிவு குழந்தையை மையமாகக் கொண்டு வளர்ச்சிக்கு ஆதரவான கவனிப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மருத்துவமனையில் உள்ள என்.ஐ.சி.யு சுற்றுவட்டார மாவட்டங்களில் பிறந்த குழந்தைகளுக்கான மேம்பட்ட மற்றும் சிறப்பு பரிந்துரை மையமாகும். குளிரூட்டும் சிகிச்சை, அதிநவீன வென்டிலேட்டார் வசதி, நைட்ரிக் ஆக்சைடு சிகிச்சை மற்றும் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளின் போக்குவரத்து போன்ற உயர்நிலை சேவைகள் இங்கு உள்ளது. மருத்துவமனையில் தாய்பால் வங்கி இருப்பது, குறைப்பிரசவம் மற்றும் நோய்வாய்ப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு தடையின்றி தாய்ப்பால் வழங்க உதவுகிறது. என்.ஐ.சி.யு வில் அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட பச்சிளம் குழந்தைகளும் பராமரிக்கப்படுகின்றனர்.
Leave a Reply