ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி, – எஸ் என் ஆர் சன்ஸ் தொண்டு அறக்கட்டளை, சர்வதேச யோகா தின கொண்டாடியதற்காக 2வது பரிசை பெற்றுள்ளது. சுதந்திர தினத்தன்று ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநரால் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதழும் ரூபாய் 40000 ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தில் கல்லூரியின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் பங்கேற்புக்காக இந்த விருது அங்கீகரிக்கப்பட்டது. சிஏஓ மகேஷ்குமார், நர்சிங் கல்லூரி முதல்வர் கிரிஜா குமாரி, தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமார், மருத்துவ மேலாளர் டாக்டர் எஸ்.அழகப்பன் ஆகியோர் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தரிடம் பரிசினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரிக்கு மாநில அளவில் இரண்டாவது பரிசு!



Leave a Reply